மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோஹித் – ஆளுநர்: 2018ஆம் புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் நட்புறவுடன் ஒன்றிணைந்து அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்போம். ஒளிமயமான வளர்ச்சியுடன் கூடிய நாளை உருவாக்குவோம். நமது நாட்டை அமைதிமிக்க, வளம் மற்றும் பலம் வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம்பெறவும், அவர்தம் நலனைப் பேணிப் பாதுகாக்கவும், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, வளமிக்க தமிழ்நாட்டைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புமணி - பாமக இளைஞரணி தலைவர்: கடந்த ஆண்டின் காயங்களுக்குப் புத்தாண்டு மருந்து போடும் ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன். தமிழக மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் புத்தாண்டில் மக்களுக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.

விஜயகாந்த் - தேமுதிக பொதுச்செயலாளர்: புதிய வாய்ப்புகளும், சம உரிமைகளும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படுமென ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் மக்கள் நம்பிக்கையோடு புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகிறோம். பல மாவட்டங்களில் தொழில் நிலை, விவசாய நிலை, மீனவர் நிலை என அனைத்தும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இன்று (01.01.2018) புத்தாண்டு பிறக்கிறது. எனவே இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனிமேல் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்கிற தொலைநோக்குச் சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2018ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில், இன்றிலிருந்தாவது ஒளி வெள்ளம் ஏற்படட்டும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும். தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையட்டும். 2018இல் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துகளை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ – மதிமுக பொதுச் செயலாளர்: தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாகக் காவிரி நதிநீர் உரிமைக்கு மத்திய அரசின் வஞ்சகப் போக்கால் அபாயமும், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தையும், நியூட்ரினோ திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ள ஆபத்தான சூழலும் வளர்ந்துள்ள நிலையில், 2018 ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது. அறிவும், ஆற்றலும்கொண்ட இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகள் இல்லை.

ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கிவிடாமல், வாக்குரிமையைப் பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 1 ஜன 2018