அழகிரி மகனுக்குப் புதுப் பதவி?

புது வருடத்தில் அழகிரி மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்க, அக்கட்சியின் தலைமை ஆலோசனை செய்துவருவதாக கோபாலபுரத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்னைகளைவிட, குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்கத்தான் போராடிவருகிறார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒதுங்கியே இருந்தார். அண்மையில் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக அடைந்த தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கினார் அழகிரி.
அதேவேளையில், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களான செல்வி, செல்வம் போன்றவர்கள் அழகிரியைக் கட்சியில் கொண்டுவருவதற்குத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். எனினும், ஸ்டாலின் தரப்பில் இதற்கு தீவிரமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.