மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

2017 தமிழ் சினிமா வசூல்: முதலிடம் யாருக்கு?

2017 தமிழ் சினிமா வசூல்: முதலிடம் யாருக்கு?

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் 2017இல் அஜித், விஜய், சூர்யா, கார்த்திக், தனுஷ், ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தனித்தன்மையுடன் எந்த நடிகரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ரசிகர் கூட்டம் எல்லா நடிகர்களுக்கும் இருந்தாலும் அது ஓப்பனிங் காட்சி, கட் அவுட் வைப்பதுடன் முடிந்துவிடும்.

படத்தில் கதை இருந்தால் தொடர்ந்து தியேட்டருக்குக் கூட்டம் வரும். இல்லை என்றால் திங்கட்கிழமை தியேட்டர் காலியாகிவிடும். தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டட பாகுபலி படம், தமிழ் படம் என்று சென்சார் ஆனது. பாகுபலி வசூல் மூலம் கிடைத்த லாபத்தை எந்தத் தமிழ் படங்களின் வசூலாலும் பெற்று தர இவ்வருட இறுதி வரை முடியவில்லை.

2017இல் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்த பாகுபலி, மெர்சல் இரு படங்களில் எது முதலிடம் என்பதில் கடும் போட்டி. இரண்டு படங்களுமே தனித்து வந்த படங்கள். பாகுபலி தமிழக உரிமை 35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது. பண்டிகை, தொடர் விடுமுறை இது எதுவும் இல்லாத சாதாரண நாளில் ஏப்ரல் இறுதியில் ரிலீசான படம். இரு மடங்கு கட்டண உயர்வு இல்லை. சாதாரண கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பபட்டு சுமார் ரூ.150 கோடி வரை வசூல் செய்த இந்தப் படத்தை சென்னை முதல் குக்கிராமம் வரை மக்கள் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடினர். வசூல் கணக்கு அடிப்படையில் தமிழகத்தில் பாகுபலி படத்தை 75 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு விநியோக உரிமை 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது.

முதல் மூன்று நாள்களில் வசூல் முடங்கிவிடும் என எல்லோரும் கூறிக் கொண்டிருந்தனர். நான் ரெளடி, நான் ரெளடி என்று வடிவேல் சினிமாவில் டயலாக் பேசுவது போன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மெர்சல் படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. தமிழக அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னைகளை மறந்து மெர்சல் படத்தின் அருமை பெருமைகளைச் சொல்லும் சம்பளம் வாங்காத PROக்களாக கடும் பணியாற்றினர். அதன் விளைவு தியேட்டர்களில் வசூல் குவிந்தது. நஷ்டத்திலிருந்து மெர்சல் தப்பித்து லாபகரமான படமானது. மெர்சல் படத்தின் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் குறுகிய நாள்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் பேர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018