மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் 22

இருட்டறையில் ஒரு விளக்கு!  மினி தொடர் 22

நிறைவேறிய ஏ.பி.ஷா கனவு!

காவல் துறை - வழக்கறிஞர்கள் மோதல் என்பது ஏதோ இலங்கை பிரச்னை மாதிரி நீண்டுகொண்டே இருக்கிறது. இரு தரப்பிலுள்ள பலரும் இந்த மோதலை கூர்தீட்டும் வகையில்தான் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர பலரின் சிந்தையில் செயல் திட்டமும் இல்லை, விருப்பமும் இல்லை.

ஆனால், மூத்த வழக்கறிஞரான ஆர்.கே.சந்திரமோகன் பார் கவுன்சில் தலைவராக இருந்தபோது அந்தப் பொறுப்புக்குரிய தன்மையோடு காவல் துறை - வழக்கறிஞர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண சில முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார்.

அவை என்ன என்பதை ஆர்.கே.சந்திரமோகனே விளக்குகிறார்.

“காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையேயான முறுகல் போக்கு நீடிக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அதற்காக சில உறுதியான செயல்பாடுகளில் இறங்கினேன். அப்போது பார் கவுன்சில் தலைவராக இருந்த நான், அப்போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்களை இதுகுறித்து பேசுவதற்காக தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். அவரிடம் முக்கியமான ஆலோசனை நடத்தினேன். அதன் பின்னர் உருவான திட்டம்தான் பெஞ்ச் பார்.

பெஞ்ச் பார்

தமிழ்நாடு பூராவும் இருக்கிற வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர், செயலாளர், உயர் நீதிமன்ற நீதிபதி, அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஜட்ஜஸ் எனப்படும் நிர்வாக நீதிபதிகள் ஆறு பேர் ஆகியோரைக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அதாவது வழக்கறிஞர்கள் –காவல் துறையினர் மோதல் இனியும் நிகழாத வண்ணம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதித்தோம்.

அதன்பிறகு, தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்களைச் சென்று பார்த்து இந்த விவாதம் பற்றியும் எங்கள் நோக்கம் பற்றியும் கூறினோம். அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அப்போது அவர் என்னிடம் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

‘நான் பாம்பேயில் பார் கவுன்சில் மெம்பராக இருந்தபோது என்னிடம் இப்படி ஒரு கனவு இருந்தது. ஆனால், நான் வெறும் கற்பனை செய்து கொண்டுதான் இருந்தேன். எனது கனவை நீங்கள் நனவாக்கி இருக்கிறீர்கள். பரவாயில்லை, சந்திரமோகன் தன் பதவிக் காலத்தில் இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்வது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. நான் கண்ட கனவை நீங்கள் நனவாக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டார் அப்போதைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா.

திருச்சியில் இதற்காகக் கூட்டம் நடத்தினோம். தமிழகம் முழுக்க உள்ள 200 பார்களில் இருந்து 125 பார்களின் தலைவர்கள், செயலாளர்கள் அந்த கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். ஒருநாள் முழுதும் நடந்த அந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்களின் கோரிக்கைகளை எல்லாம் கொட்டினார்கள். வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் எல்லாமே தங்களின் சொந்தப் பிரச்னைக்காக அல்ல. இதில் காவல் துறையினர் தங்களைக் கையாளும் போக்கு பற்றியே வேதனையாக தெரிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதத்துக்குப் பிறகுதான் இந்த மோதல் நெருப்பை அணைக்கும் ஒரு முக்கியமான குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட நீதிமன்றங்களிலும், சார்பு நீதிமன்றங்களிலும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை ஒவ்வொரு நிலையிலும் ஒரு குழுவை உருவாக்கினோம்.

உதாரணத்துக்கு அரியலூர் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்...

அரியலூரில் மாஜிஸ்திரேட் கோர்ட் இருக்கிறது. அதன் உயர்ந்தபட்ச நீதிபதியான மாஜிஸ்திரேட் தலைமையில் ஒரு குழு. அந்தப் பகுதி காவல் துறை டி.எஸ்.பி. அதில் உறுப்பினராக இருப்பார். அந்தப் பகுதியில் இருக்கும் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரோ, செயலாளரோ உறுப்பினராக இருப்பார். இந்தக் குழு என்பது அரியலூர் பகுதியில் காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது, பிரச்னை ஏற்பட்டுவிட்டால் அதை உடனடியாகப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுவில் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார். அந்த மாவட்டத்தின் எஸ்பி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். அந்த நீதிமன்ற பரிபாலன பகுதியில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் பூசல்கள் ஏதும் ஏற்படா வண்ணமும், அவ்வாறு ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் வண்ணமும் அந்தக் குழு செயல்படும். இதுபோல பெருநகரங்களுக்கும் காவல் துறை - வழக்கறிஞர் சங்கம் இணைந்த குழு அமைக்கப்பட்டது.

இதேபோல் உயர் நீதிமன்றத்துக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ‘மெட்ராஸ் போர்ட்போலியோ ஜட்ஜ்’ என்று ஒரு நீதிபதி இருப்பார். அந்த நீதிபதி தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. இதில் டிஜிபி, உள்துறை செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் முக்கியமான வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தக் குழுக்களின் மூலம் ஏகப்பட்ட பிரச்னைகளை நாங்கள் தீர்த்திருக்கிறோம். இந்தக் குழுவில் காவல் துறையின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் என இரு தரப்பும் நீதிபதிகள் தலைமையில் பேசி தங்களுக்கு இடையிலான பிரச்னைகளை எளிதாகத் தீர்த்துக்கொள்ள முடிந்தது. இது எனக்கு மிகப் பெரிய திருப்தி தந்த விஷயம்” என்று பெருமூச்சு விட்டார் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பார் கவுன்சில் தலைவருமான ஆர்.கே.சந்திரமோகன்.

எவ்வளவு பெரிய சாதனை...

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு!-1

இருட்டறையில் ஒரு விளக்கு!-2

இருட்டறையில் ஒரு விளக்கு!-3

இருட்டறையில் ஒரு விளக்கு!-4

இருட்டறையில் ஒரு விளக்கு!-5

இருட்டறையில் ஒரு விளக்கு!-6

இருட்டறையில் ஒரு விளக்கு!-7

இருட்டறையில் ஒரு விளக்கு!-8

இருட்டறையில் ஒரு விளக்கு!-9

இருட்டறையில் ஒரு விளக்கு!-10

இருட்டறையில் ஒரு விளக்கு!-11

இருட்டறையில் ஒரு விளக்கு!-12

இருட்டறையில் ஒரு விளக்கு!-13

இருட்டறையில் ஒரு விளக்கு!-14

இருட்டறையில் ஒரு விளக்கு!-15

இருட்டறையில் ஒரு விளக்கு!-16

இருட்டறையில் ஒரு விளக்கு!-17

இருட்டறையில் ஒரு விளக்கு!-18

இருட்டறையில் ஒரு விளக்கு!-19

இருட்டறையில் ஒரு விளக்கு!-20

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 1 ஜன 2018