மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

அழகு தேவதைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

‘அழகு என்பது நிறத்திலோ, அலங்காரத்திலோ அல்ல; மனதில்தான் உள்ளது’ என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் அவ்வப்போது நம்மை அழகுற வைத்துக்கொள்வதால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் பெருகுகிறது.

கறுப்பாக இருப்பவர்கள் தம்மைக் குறைவாகவும் சிவப்பாக இருப்பவர்களே சிறந்தவர்களாகவும் கொள்வது போன்ற மாயை உலகில்தான் இன்று பலரும் வாழ்கின்றனர்.

அன்றைய உலகில் எந்த ஃபேஷியலும் ஸ்க்ரப்பும் இல்லை. கறுப்பே அழகாக இருந்தது. அதற்கேற்ற இயற்கை அழகுப் பொருள்களும் பயன்படுத்தினோம். கால மாற்றங்கள் மாற மாற இன்று அழகுக்காகப் பயன்படுத்துவதே அலர்ஜியை ஏற்படுத்தும் அளவு ஆகிவிட்டது.

சிலர் தம்மை அழகாகக் காட்டிக்கொள்வது, ‘தான் எவ்விதத்திலும் குறைவில்லை; நானும் இந்த சமூகத்தில் போற்றப்படுபவள்தான்’ என்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என நினைப்பதுண்டு.

சிலர் தன்னை அழகாகக்காட்டிக் கொள்வதையே பிரதானமாகக் கொண்டிருப்பர்.

எது எப்படியோ... மனம் அழகாக அன்பு கொண்டிருத்தலே முதன்மை அழகு.

மாத செலவில் பார்லருக்கென தனி தொகையை ஒதுக்கும் அளவு ஆகிவிட்டது இன்றைய காலகட்டம். பின்விளைவுகள் ஏற்பட்டு அதற்கான மருத்துவம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கும் வளர்ந்துவிட்டது.

இயற்கையான மஞ்சள் கொண்டுக் குளிப்பதையே மறந்துவிட்டு வளர்கிறது அடுத்த தலைமுறை.

காரணம் என்ன?

நேரமின்மை.

ஃபேஷியலில் செய்யும் அனைத்தும் வெளியில் கிடைக்கக்கூடியவையே. அவற்றை வாங்கி தமக்குத் தாமே பயன்படுத்த சோம்பேறித்தனம்.

எலுமிச்சையோ, மஞ்சளோ வீட்டிலிருந்தாலும் பயன்படுத்த தோன்றாமல் பார்லரில் அதைக்கொண்டு செய்வதை உயர்வாக நினைக்கும் மனப்பான்மை.

காலையில் எழுந்து அனுதின வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. வாரம் ஒருநாள் விடுமுறையில் அதற்கென தனி வேலைகள். எங்கே இதையெல்லாம் வீட்டில் செய்வது... நேரமில்லை என்ற காரணம் காட்டும் குணம்.

இயற்கைக்கு மாறாக அதிக நேரம் விழித்திருந்து அதிகாலை எழாமல் இருப்பதே இவ்வனைத்துக்கும் மூலக் காரணம். நன்றாக யோசித்துப்பாருங்கள்.

4 மணிக்குக் கூட வேண்டாம். குறைந்தது காலை 5 மணிக்கு எழுந்து, இரவு 9-10 மணிக்குள் உறங்கச்செல்வதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நிறைய நேரம் கிடைக்கும். பயனுள்ளதாக்குவோம்.

உடலும் மனமும் மட்டுமல்ல; முகமும் அழகுற அமைதியுற்று ஜொலிப்பதைக் காணலாம்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 1 ஜன 2018