மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ரஜினியின் கொள்கை என்ன?

ரஜினியின் கொள்கை என்ன?

ரஜினி தனது கொள்கைகள் என்ன என்பதை முதலில் வரையறுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 26 முதல் ரசிகர்களைச் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு எதிர்பார்ப்புக்கிடையில் நேற்று (டிசம்பர் 31) தனது அரசியல் பிரவேசம் உறுதி என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடையே எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் என்பது ஆன்மிக அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பது பிரச்னை அல்ல. ரஜினியின் அரசியல் பிரவேசம் எந்த திசையில் இருக்கப்போகிறது?” என்று வினா எழுப்பியுள்ள அவர்,

“தமிழக மற்றும் தேசிய அரசியலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார் என்பதைவிட , அவருடைய கொள்கைகள் என்ன என்பது முக்கியமானது. ரஜினி குறிப்பிடுவதைப் போல நாங்களும் மாற்றத்தை விரும்புபவர்களே. ஆனால், அந்த மாற்றம் என்பது எந்த திசையை நோக்கியுள்ளது? முதலில் அவர் கொள்கைகளையும் திட்டங்களையும் வரையறுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018