மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

தொடரும் தலித் வன்முறை!

தொடரும் தலித் வன்முறை!

வினிதா கோவிந்தராஜன்

அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே, தொட்டிநாயக்கர் என்ற மேல் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தலித் மக்கள் வசிக்கும் குக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலை அடுத்து, ஊடகங்கள் இரண்டு வாரமாக அதுகுறித்து தகவல் சேகரித்து வெளியிட்டு வந்தன. ஒரு மாதத்துக்குப் பிறகு உள்ளூர் ஆர்வலர்கள், தலித் மக்களுக்கு இன்னும் பாதுகாப்பு இல்லை எனக் கூறினர். இந்தத் தாக்குதலுக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களைப் புரிந்துகொள்வதற்காக நான் கே.தொட்டியபட்டி கிராமத்துக்குச் சென்றேன்.

தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராமங்களைப் போன்று, கே.தொட்டியபட்டி கிராமமும், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், நிலங்களைச் சொந்தமாக கொண்டுள்ள 250 குடும்பங்களும், தலித் பிரிவில் 40 குடும்பங்களும் வசித்து வந்தன. தீயினால் சிதைந்த குடிசைகளும், எப்போதும் இரண்டு போலீஸ்காரர்களின் காவலும் இன்னும், தாக்குதலின் தடயங்களை நினைவுப்படுத்திக்கொண்டு இருக்கிறது. தலித் கிராமவாசிகளின் நடத்தையில் பதற்றம் காணப்பட்டது. மேல்சாதியை சேர்ந்த மக்கள் தங்களை வேவு பார்த்துக்கொண்டே இருப்பதாக தலித் மக்கள் கூறினர்.

தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் எனக்கு அறிமுகம் கிடைத்த பிறகு, கே.தொட்டியபட்டி கிராமத்துக்கு வந்தேன். என்னுடைய அறிக்கையின்படி, இந்த நிகழ்வுகளைக் குறித்து நல்ல புரிதல் ஏற்பட, தொட்டிநாயக்கர் சமூகத்தில் உள்ள உறுப்பினர்களிடமும் நான் பேச வேண்டும் என்று தலித் மக்களிடம் சொன்னபோது, சிலர் என்னை சந்தேகப்பட்டனர். அவர்களில் சிலர் ஆட்சேபனைகளை தெரிவித்தனர். “சம்பவத்தின் தவறான பகுதியை மட்டும் அவர்கள் உங்களுக்குக் கூறுவார்கள், நீங்கள் அதை எழுதக்கூடாது” என கூறினார்கள். ஆனால், அந்தக் கிராமத்தின் தலைவர் ஒரு பத்திரிகையாளர் இரண்டு பக்கத்திலுள்ள நியாயங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என மக்களுக்கு விளக்கம் கொடுத்தார். சில விவாதங்களுக்குப் பிறகு, கிராமத்தின் அந்தப் பகுதிக்கு என்னை அழைத்து செல்லுமாறு ரோந்து பணியில் இருந்த ஒரு கான்ஸ்டபிளை கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பகுதி 100 மீட்டர் தொலைவுகூட இல்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத தடைகள் பல இருந்தன. அங்கு, பல ஆண்டுகளாக அவநம்பிக்கை மட்டுமே பலப்படுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. நான் அந்தப் பகுதிக்குச் செல்லும் வரை தலித் மக்கள் என்னை கவனித்து வருவதை உணர முடிந்தது. தொட்டிநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து ஒன்று கூடினர்.

இதற்கிடையில், கான்ஸ்டபிள் உள்ளூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்து, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் அங்கே வந்தார்கள். ஒரு நிருபர் அங்கே இருப்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள் இன்ஸ்பெக்டர்கள். இதற்கடுத்து, இரண்டு பிரிவினரிடமும் பழிவாங்கும் எண்ணம் வன்முறைக்குக் காரணமாக இருக்கிறது என இன்ஸ்பெக்டர்கள் கூறினர்.

தொட்டிநாயக்கர் சமூகத்தின் தலைவரிடம் என்னை கான்ஸ்டபிள் அறிமுகப்படுத்தி வைத்தார். இங்கு நடந்த சம்பவம் குறித்து தெரிந்துகொள்ள வந்திருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் பேசலாம். பேச விருப்பம் இல்லையென்றாலும் பிரச்னை இல்லை என கான்ஸ்டபிள், தலைவரிடம் கூறினார்.

இருதரப்பும்

தொட்டிநாயக்கர் கிராம மக்கள் தங்கள் கதையை விவரிக்க ஆவலாக இருந்தனர். “அந்த மக்கள் இந்தச் சம்பவம் குறித்து உங்களுக்குப் பொய் சொல்லியிருப்பார்கள்” என்று ஒருவர் சொன்னார். “என்ன நடந்தது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்” என கூறினார். தலித் கிராமவாசிகள் போலவே, அவர்களும் தேநீர் கொடுத்தனர். மேலும், என்னைத் தரையில் உட்காரவிடாமல் நாற்காலியில் உட்கார வலியுறுத்தினர். என்னுடன் சேர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்தார்கள். மேலும், வாட்ஸ்அப் மூலம் எனக்கு தகவல்களை அனுப்புவதாக உறுதி அளித்தார்கள். நான் தலித் குடியேற்றத்துக்குச் செல்லும் வரை என்னைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

ஆறு ஆண்டுகளில் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளுக்கு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து மற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிகளவில் செலவு செய்துள்ளனர். இது அவர்களுக்குக் கடன் சுமைகளைச் சேர்த்தது. ஆனால், இந்த சம்பவத்தில் இருபக்கங்களையும் ஆராய்வது என்னுடைய வேலை என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். இரு சமூகங்களும் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கசப்பான உறவுகளை நினைத்து பார்த்தனர். அதுமட்டுமல்லாமல், எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

கே.தொட்டியப்பள்ளியின் கிராமவாசிகள் என்னுடைய வருகையை நிகழ்வுகளின் துல்லியமான தகவல்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகக் கருதினர். நிருபர் என்ற பொறுப்பில் இருக்கிற எனக்கு இந்தச் சம்பவம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நானும், சக நிருபர்களும் சமூக ஊடகத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் சில காரியங்களுக்கு நியாயம் கேட்டு எதிர்க்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மக்களால், நாங்கள் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகிறோம். ஆனால், கே. தொட்டியபட்டி கிராம மக்கள் என் மேல் வைத்த நம்பிக்கையின் காரணமாகத்தான் அவர்கள் கடந்து செல்லாத தடைகளைத் தாண்டிச் செல்ல என்னை அனுமதித்தார்கள்.

தமிழில்: சா.வினிதா

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018