மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

அப்பாடா ஒருவழியா நியூ இயர் வந்துருச்சு.

சில வருஷத்துக்கு முன்னாடி விழாக்காலங்கள்ல மெசேஜ் அனுப்பினா ரெண்டு ரூபாய் காசு எடுப்பாங்க. அதனாலேயே 31ஆம் தேதி ராத்திரி 11:58க்கே அனுப்பிருவோம்.

அதுக்கும் முன்னாடி வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம். அப்போல்லாம் டி.வியில நடிகர் நடிகையர் 12 மணிக்கு வாழ்த்துகள் சொல்லுவாங்க. அதைப் பார்க்கவே உட்கார்ந்திருப்போம்.

“அதெல்லாம் ஒரு காலம்”னு சொன்னா...

“என்னா வடிவேலு... வயசாகிட்டா”னு சொல்வீங்க.

அதனால... பரிணாம வளர்ச்சி இப்படியெல்லாம் மாறிடுச்சு அப்படின்னு சொல்றேன்... (எப்பூடி...)

அடுத்ததா, ராத்திரி கொண்டாடுற வழக்கம் நம்மிடத்தில் இல்ல... இரவு நேரம் கோயிலை மூடிதான் இருக்கணும்னு சொல்றாங்க. சரிதான்... ஆனா ஏன் இத மூணு வருஷம், நாலு வருஷம் முன்னாடியெல்லாம் சொல்லல... இதான் என் கேள்வி.

இந்தபக்கம் ஜெபம்... புது வருட ஆராதனைன்னு போயிட்டு இருக்காங்க.

இந்த புதுவருட டார்கெட்டெல்லாம் முடிக்க, கடைசி நேர, நிமிடம் வரைக்கும் போராடிய போராளிகளே... நீங்கள்லாம் நிம்மதியா கொண்டாடுறீங்களா?

எத்தனை பேரு குடும்பத்தோட வெளில போறீங்க... நாளைக்கு ஆபீஸ் உண்டுங்கற நினைப்பு இல்லாம.

பேசிட்டு இருக்கும்போதே நோட்டிபிகேஷன் வருது. ஆறு வருஷமா ஒருத்தன் ஃப்ரெண்டா இருக்கான், இதுவரை போன் பேசினது கிடையாது. ஒரே ஒரு தடவைதான் நேர்ல பார்த்திருக்கேன். அப்போ வாட்ஸ்அப் நம்பரைக் குடுத்துப்புட்டேன். ஆனா, தினமும் வாட்ஸ்அப்ல குட்மார்னிங், குட் நைட் மெசேஜ் மட்டும்வரும்... யாருய்யா நீங்கள்லாம்.

இங்க பாதிபேர் ரஜினியை எதிர்த்தும் வரவேற்றும் மீம்ஸ் போட்டும் தாளிச்சிக்கிட்டு இருக்காங்க.

இன்னொரு ஆளு, வாட்ஸ்அப்பைத் தவிர்ப்போம்; வளமுடன் வாழ்வோம்னு வாட்ஸ்அப்லதான் அனுப்பறான். ஒரு வழியா புதுவருட கொள்கைகள்லாம் எடுத்து முடிச்சாச்சு.

போன வருஷம் என்ன முடிவெடுத்தன்னு கேட்டா, அது மறந்து போச்சாம்... அதுவேற விஷயம்.

அடுத்ததா டாப்டென் மனிதர்கள், சம்பவங்கள்தான் இன்னும் ஓயல. கால் பண்ணியெல்லாம் லிஸ்ட் அனுப்ப சொல்றாங்க.

என்னவோ பரபரப்பா இருக்காங்க... ஆனா என்னாத்துக்குன்னுதான் தெரியல... கேட்டா, நியூ இயராம்.

லீவு நாள்லயும் பிசியா இருக்கறதுன்னா வேற யாரு, நாமதான்.

சரி, ரொம்ப நேரம் படிச்சிக்கிட்டு இல்லாம போயி புது வருஷத்தைக் கொண்டாடுங்க.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 1 ஜன 2018