மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

நான் அதிர்ஷ்டசாலி: ரித்து வர்மா

நான் அதிர்ஷ்டசாலி: ரித்து வர்மா

‘என்னுடைய முதல் தமிழ்ப் படத்திலேயே பெரிய இயக்குநருடன் பணிபுரிவதை நினைக்கும்போது நான் அதிர்ஷ்டசாலி என்றே தோன்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார் நடிகை ரித்து வர்மா.

இயக்குநர் கெளதம் மேனன் தற்போது இயக்கிவரும் துருவ நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ரித்து வர்மா. இவர், தெலுங்கில் வெற்றிபெற்ற ‘பெல்லி சுப்புலு’ என்ற படத்தில் நடித்தவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பற்றி நடிகை ரித்து வர்மா சமீபத்தில் ஸிஃபி இணையத்தளப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் குடும்பத்தினரின் பூர்வீகம் மத்தியப்பிரதேசம். ஆனால், நாங்கள் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறோம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். இன்ஜினீயரிங் படித்த நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னைப் பார்க்கும் பலரும், போட்டோஜெனிக் ஃபேஸ் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், நான் அம்மாவின் கட்டாயத்தால் அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வென்றேன். பிறகு, மாடலிங், ஃபேஷன் ஷோ என என் வாழ்க்கை திசைமாறியது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 1 ஜன 2018