மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2018ஆம் ஆண்டு அனைவருக்கும் சீரும் சிறப்புமாக அமையட்டும்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது சமையல், புதுவகையான குறிப்புகள் என்று பார்த்து வருகிறோம். இனிவரும் காலங்களிலும் நேர்த்தியான பல சுவைகளோடு நீங்கள் சமைத்திட பல மெனுக்கள் வரும்.

‘ஸ்மார்ட் வொர்க்’ என்று சொல்வதுபோல, நம் பிரதான சமையலையே ஸ்மார்ட்டாக செய்திட அனுதினமும் அசத்தலாம்.

அடுத்ததாக பரிமாறும்விதம், சில அலங்காரங்கள் என கொடுக்கும் விதத்திலும் கவரலாம்.

ஆண்களே, வீட்டில் தனியே அடுக்களையில் போராடும் பெண்களுக்கு அவ்வப்போது சிற்சில உதவிகளும் அன்பான ஆறுதல்களுமே போதுமானதாக இருக்கும். ‘சாப்பிட்டியா’ என்று கேட்பதுகூட பேருதவிதான்.

(இப்போதெல்லாம் ஆண்களும் சமைக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களும் உதவிபுரிவோம்... ஹி ஹி ஹி )

ஹைபிரிட் காய்களை தவிர்த்தல் நலம். பார்ப்பதற்குப் பளபளவென இருக்கிறதென நோய்களையே நாடுகிறோம். அதனால், அதிலும் கவனம் கொண்டு நல்ல காய்கறிகளையும் கீரைகளையும் வாங்குவோம்.

அதற்காக இயற்கை அங்காடியே கதி என இருக்கக் கூறவில்லை. சாதாரண கடைகளிலே நாம் பளபளவெனவும், கொஞ்சம்கூட பூச்சி இல்லாத கீரைகளை கேட்கவும்தான் ஹைபிரிட் பக்கம் தலைசாய்கிறது இன்றைய வேளாண்மை.

எது எப்படியோ... கஷ்டப்பட்டு சமைக்காமல் இஷ்டப்பட்டு சமைத்தாலே அதன் ருசியே தனிதான். ஆத்மார்த்தமும் கூட!

தொடர்வோம் இனிவரும் காலங்களும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 1 ஜன 2018