ராபி பயிர் விதைப்பு 91% நிறைவு!

நடப்பு ராபி பருவத்துக்கான பயிர் விதைப்பு 91 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளதாக வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடப்பு ராபி பருவத்தில் டிசம்பர் 29ஆம் தேதி வரையில் 565.79 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்த வேளாண் பரப்பில் இது 91 சதவிகிதமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 1 சதவிகிதம் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோதுமையைப் பொறுத்தவரையில் இந்த ராபி பருவத்தில் 273.85 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 16.33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அரிசியும், 150.63 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பும், தானியங்கள் 50.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துகள் 74.27 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.”