மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

மழை போதுமான அளவு பெய்துவிட்டதால் அளவுக்கதிகமான பாதிப்புகள் இந்த டிசம்பரில் இல்லாமல் தப்பினோம். ஓரளவு வெயில் இருப்பினும் காலை பனியின் அரவணைப்பில் மேலும் சில மணி நேரம் தூக்கம் நீள்கிறது. வழக்கமான பணிகளைச் செய்யவிடாமல் ஏதோ ஒன்று தடுக்கும். அதுதான் உடல் சோர்வு. அதை நீக்கவும் ஓர் அற்புதம் இருக்கிறது. அது, எலுமிச்சைப்பழப் பானகம்

சுத்தமான நீர் - 1 லிட்டர், எலுமிச்சைப்பழம் - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்), பொடித்த வெல்லம் - 100 கிராம், கிராம்பு - 5 (பொடி செய்துக் கொள்ளவும்), மிளகு - கால் தேக்கரண்டி, இந்துப்பு - அரை தேக்கரண்டி. செய்முறை: நீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும். பின்பு எலுமிச்சைச் சாறு, கிராம்புத்தூள், மிளகுத்தூள், உப்பு கலந்து பருகவும். பயன்: களைப்பு, தலைச்சுற்றல் மயக்கம் நீங்கும். ஜீரண கோளாறுகள் நீங்கும். களைப்பு நீங்கும். ஒரு நாளைக்கு இரு முறை பருகலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க: சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிடலாம். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கப் அளவுக்குச் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 1 ஜன 2018