மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஏர்டெல்லின் புதிய சலுகை!

ஏர்டெல்லின் புதிய சலுகை!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 பேக்கில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் ஏற்கெனவே ரூ.98 பேக்கில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் தற்போது 98 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி 99 ரூபாய்க்கு இலவச வாய்ஸ்கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜிபி 4ஜி / 3ஜி டேட்டா ஆகியவை 10 நாள்களுக்கு அளிக்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் இதே 98 ரூபாய்க்கு இலவச வாய்ஸ்கால், 140 எஸ்.எம்.எஸ்., 2.1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா (ஒரு நாளைக்கு 0.15 ஜிபி) ஆகியவை 14 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கெனவே ரூ.199 திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா 28 நாள்களுக்கு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 10 எஸ்.எம்.எஸ்களும் வழங்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018