மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

திருமணத்தை மறைத்த பிரபல நடிகை!

திருமணத்தை மறைத்த பிரபல நடிகை!

பட வாய்ப்புகளுக்காகத் தனக்குத் திருமணமான விஷயத்தை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்துள்ளார் நடிகை சுர்வீன் சாவ்லா.

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுர்வீன் சாவ்லா. மேலும், பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2, புதிய திருப்பங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுர்வீன் சாவ்லா தனது நீண்ட நாள் நண்பரும், காதலனுமான அக்ஷய் தாக்கர் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். 2015இல் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்த விஷயத்தை அண்மையில் சமூக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், அனைவரும் தங்களை வாழ்த்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2015இல் நடந்த திருமணத்தை இப்போது வெளியிட்டுள்ளதற்குக் காரணம் சுர்வீன் சாவ்லா படங்களில் நடித்துக்கொண்டிருந்ததாலும், புதிய பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதாலும் திருமண விஷயத்தை அவர் மறைத்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 1 ஜன 2018