மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

மீண்டும் மையமாகும் போயஸ் கார்டன்!

மீண்டும் மையமாகும் போயஸ் கார்டன்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரஜினியின் அரசியல் அறிவிப்பால் தமிழக அரசியல் மீண்டும் போயஸ் கார்டனை நோக்கித் திரும்பியுள்ளதாக ரஜினி ரசிகர்கள் ட்விட் தட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அதற்கெல்லாம் ரஜினிகாந்த் தன்னுடைய புன்னகையை மட்டுமே பரிசாக தந்தார். முதல்முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில், போர் வரும், தயாராக இருங்கள் என்று கூறி தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் இன்று ( டிசம்பர் 31) கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில், அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும், ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவரது ரசிகர்களும், வலைத்தளப் பதிவர்களும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதாவது ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அவர் மறைந்த நிலையில் அதே போயஸ் கார்டனில் வசித்துவரும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதகாவும் அறிவித்துள்ளார். இதனால் தற்போது தமிழக அரசியல் மீண்டும் போயஸ் கார்டன் பக்கம் திரும்பியுள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Rajinikanth Fans‏ @RajiniFansTeam

போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு முதல்வர்... வா தலைவா வா வா..!!!

டுவிட்டர் அரசன்‏ @thamizhinii

போயஸ் கார்டனிலிருந்து" மீண்டும் ஒரு தலைவர் முதல்வர்!

ѕαи∂у‏ @SandyKrish

போயஸ் கார்டனில் இருந்து மறுபடியும் ஒரு இரட்டை விரல் 🤘

Sushima Shekar 😊‏ @amas32

போயஸ் தோட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை போயஸ் தோட்டமே நிரப்பிக் கொள்கிறது!

புதுகை~~~ முத்து‏ @pudhukai

போயஸ் கார்டன் என்றாலே அது முதல்வர் தான் போல

[email protected]_

போயஸ் கார்டெனில் இருந்து இன்னொரு அரசியல்வாதி

இதுபோன்ற பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017