மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பிறந்தது 2018!

பிறந்தது 2018!

உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உலகில் முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்திய நேரப்படி, சுமார் மணி 4.30 அளவில் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி 12 மணி பிறந்துவிட்டது.

இந்நிலையில், அந்நாட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது

ஆக்லாந்து நகரில் மக்கள் இதை வாண வேடிக்கையுடன், இனிப்புகளை வழங்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல், ஆறு மணிக்கு ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. அங்கும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடினர். இரவு எட்டரை மணிக்கு ஜப்பானிலும் புத்தாண்டு தொடங்கவுள்ளது.

இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்குப் புத்தாண்டு பிறப்பதையொட்டி தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 12 மணியை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில்லா மற்றும் பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை,மெரீனா பகுதிகளில் 3500 காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மெரீனா கடற்கரையில் கூட்டத்தைக் கண்காணிப்பதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், நெம்மேலி, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அங்கு 121 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தணிக்கை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017