மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

புத்தாண்டு ஏற்பாடு: கிரண்பேடி ஆய்வு!

புத்தாண்டு ஏற்பாடு: கிரண்பேடி ஆய்வு!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களைப் புதுவை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

இன்று இரவு புத்தாண்டு பிறப்பதையொட்டி அதனைக் கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மாலை முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் அங்கு களைக்கட்ட தொடங்கிவிட்டன. அதிகளவு சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் குவியக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் அதிகமாகப் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், வரும் 31.12.2017 மதியம் 2 மணி முதல் 1.12.2018 அன்று காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை மூடப்படும் என்று புதுச்சேரி கிழக்குப் பிரிவு போக்குவரத்துக் காவல்துறையின் கண்காணிப்பாளர் வீரபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மேலும், `கடற்கரைக்கு புஸ்ஸி வீதி வழியாக வரும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வலதுபுறம் துமாஸ் வீதி வழியாகச் சென்று பழைய துறைமுகம், பழைய சாராய ஆலை மற்றும் பிரான்சோ மார்த்தேன் வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வரும் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது காவல்துறைக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி இன்று(டிசம்பர் 31) அப்பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். லே கபே ஓட்டல் முன்பு இறங்கிப் பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். பின்னர் ட்ரோன் மூலம் கண்காணிக்க செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். கடற்கரைச் சாலை முழுவதும் சென்று பார்த்த பின் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட உப்பளம் விளையாட்டு திடல், துறைமுக வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் புல்வார் பகுதிகளில் சுற்றிப்பார்த்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017