மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிம்பு- ஓவியா: நியூ இயர் ட்ரீட்!

சிம்பு- ஓவியா: நியூ இயர் ட்ரீட்!

புத்தாண்டு தின ஸ்பெஷலாக சிம்பு- ஓவியா கூட்டணியில் உருவாகியிருக்கும் `மரண மட்டை’ பாடல் வெளியாக இருக்கிறது.

நடிகர், பாடகர், இயக்குநர் எனப் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் சிம்பு, சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் சிம்புவின் இசைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இசையமைப்பாளராகவும் முத்திரைப் பதித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாகப் புத்தாண்டை தினத்தை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடி இருக்கிறார். இந்த பாடலை புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளனர்.

இதற்குமுன் சிம்பு பல ஆல்பங்களையும் உருவாக்கி இருக்கிறார். அதில் சிம்பு மட்டுமே அதிகம் பாடியிருப்பார். ஆனால் தற்போது தன்னுடைய இசையில் ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். முன்னணி பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் சக்க போடு போடு ராஜா படத்தில் பாட வைத்தவர், இதில் `பிக் பாஸ்’ ஓவியாவுடன் இணைந்திருக்கிறார்.

சிம்பு- ஓவியா காம்பினேஷனில் உருவாகியிருக்கும் அந்தப் பாடலை எதிர்நோக்கி இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017