மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தது கேரள அரசு!

புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்தது கேரள அரசு!

ஓகி புயலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கைவிட கேரள அரசு அரசு முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம்(நவம்பர் 30)ஆம் தேதி ஓகி புயல் வீசியது. இந்தப் புயலினால் கேரளாவிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் பிணமாக மீட்கப்பட்டனர். இன்னும் பலரது கதி என்ன வென்று தெரியாத நிலை உள்ளது.இதனால் கேரள கடலோர கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஓகி புயல் காரணமாகக் கேரள கடற்கரை கிராமங்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. மேலும் புத்தாண்டை வரவேற்கவும் மக்கள் தயாராக வில்லை.

கேரளாவில் மிகபிரபலமான கோவளம் கடற்கரையில் வழக்கமாகச் சுற்றுலாத்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடக்கும். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பலர் இங்குத் தங்கியிருந்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கேரள சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:"ஓகி புயலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017