மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

போர் ஆமாம்..போர்: அப்டேட் குமாரு

போர் ஆமாம்..போர்: அப்டேட் குமாரு

ஒருவழியா கட்சி ஆரம்பிக்கப்போறதா சொன்னாலும் சொன்னாரு இருக்குற எல்லா சேனலும் காபாலி மியூசிக் போட்டு கொண்டாடுறாங்க. நல்லவேளை இன்னைக்கு சொன்னாரு. நாளைக்கு சொல்லியிருந்தார்னா புத்தாண்டு ஸ்பெஷல் படங்கள்லாம் பாக்கமுடியாம போயிருக்கும்னு வேற புலம்புறாங்க சார். சரி டிவியில தான் இந்த பாடுன்னா டிவிட்டர் பேஸ்புக் பக்கம் முழுக்க அவரை கழுவி ஊத்துறவங்களும் காலுல விழுறவங்களும் ஆளுக்கு தக்கபடி ஸ்டேட்டஸ் போட்டு தள்ளுறாங்க. அரசியலுக்கு வருவேன்... ஆனா இப்ப யாரும் அரசியல் பேசவேண்டாம்னு ரஜினி பேச அதுக்கும் ஸ்டேட்டஸ் தட்டுறாங்க. கமல் போடுற டிவிட் தான் புரியல, தலைவரு பேசுறதே புரியலங்குறாங்க. ஆமா கட்சி ஆரம்பிச்சு, பிரச்சாரம் பண்ணி, மக்கள் ஓட்டு போட்டு, ஜெயிச்சு, பதவிக்கு வந்ததுக்கு அப்புறம் தானே ராஜினாமா பண்ண முடியும்? அதுக்குள்ள ராஜினாமாக்கு போயிட்டா எப்படி.. என்ன நான் சொல்றது.. அப்டேட்டை பாருங்க

@குணசீலன் வேலன்

ஆந்திராவில் சிரஞ்சிவி தனி கட்சி தொடங்கி பின்னர் காங்கிரஸிடம் விற்றது போல ரசினி தனி கட்சி தொடங்கி பாஜகா விடம் விற்க திட்டம்....

@Manoj Kumar

தினகரனை ஆதரிக்கும் சு.சாமி, ரஜினியை எதிர்க்கிறார்.

சு.சாமியின் வார்த்தைக்கு எதிரான முடிவை எடுப்போம் என ஆரியம் காய் நகர்த்துகிறது

@Arun Pandiyan

என்னடா தேடுற?

கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்னு .. ஒரு நல்லவர் சொன்னார்ப்பா .. அவரதான் தேடிட்டு இருக்கேன்...

@SD Prabhakar

இது முக்கியமில்லை.

ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் நாங்களும் இவருடன் இணைந்து பயணிக்கப்போகிறோம் என கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வரப்போகுது அவங்க தான் முக்கியமான டார்கெட்.

லாரன்ஸ்

பொன்ராஜ்

கஸ்தூரி....

@Shan Karuppusamy

ரஜினி மேக்கப் கலைக்கிறார். மாறுவேடம் அணிகிறது பிஜேபி.

@SD Prabhakar

NewsMinuteல இருந்து ஒரு நிருபர் பாஜகவின் திருப்பதி நாராயணனை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பேட்டியின் ஒரு கட்டத்தில் ரஜினியின் அரசியல் வரவு தமிழக பாஜகவின் வாக்குவங்கியை பாதிக்குமா என கேட்டுவிட்டார்.

பப்பி ஷேம் ஆயிடுச்சி அவருக்கு..

@Shanmugapriyan Sivakumar

மருத்துவ முத்தத்தின் மறுபெயர் பிரென்ச்சு முத்தம்

ஆன்மீக அரசியலின் மறுபெயர் RSS செய்யும் மதவாத அரசியல்

@SanjanaParthi

இந்த மக்கள் ரஜினி வந்தா மாறிடும் கமல் வந்தா மாறிடும்னு நம்பிட்டு இருக்காங்க..

யாரு வந்தாலும் நாம மாறுனாதான் எல்லாமே மாறும்னு புரிஞ்சுகிறதுக்கு நூறு வருசம் ஆகும்

@Tamil_Zhinii

சோ இருந்து இருந்தால் பத்து யானை பலம் கிடைத்துருக்கும் - ரஜினி

ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த படமே ரிலீஸ் ஆகிருக்காது...!

@udanpirappe

அரசியலுக்கு வரேன்.

ஆனா அரசியல் பேசமாட்டேன் -ரஜினி

உஸ்ஸ்

இதுக்கு கமல் போடுற டிவிட்டே தேவலைடா .

@Rajayogiahgtwa1

நீ எவ்வளவு பெரிய நடிகனாகவோ பணக்காரனாகவோ அறிவாளியாகவோ நேர்மையாளனாகவோ தியாகியாகவோ இருந்துக்கோ

தேர்தல்னு வந்தா காச வெட்டு ஓட்டை அள்ளு !

@Apallava

இங்கே நாம் பேசும் நடுநிலையும் புரட்சியும் யோக்கியமும் நடைமுறைக்கு சாத்தியமில்லையென வெளி உலகில் எடிட் செய்யப்படுகிறது

@HAJAMYDEENNKS

வெளிமாநிலத்தினர் தமிழகத்தை பார்த்து சிரிக்கின்றனர் - ரஜினி #

அண்ணே நீங்களும் வெளிமாநிலம்தான்...!

@Boopathy Murugesh

BJPக்கு தமிழ்நாட்ல இருக்க 54 ஓட்ல 27 பேரு ரஜினி பேன்ஸ்.. BJP ஓட்டு குறையும்..

அதேவேளையில் நோட்டாவுக்கு ஓட்டு போட்ட பாதி பேரு ரஜினிக்கு ஓட்டு போடுவான்..

எப்படி பார்த்தாலும் BJP - நோட்டா கடும் போட்டி இருக்கும்..

@sundartsp

எஜமான் பணக்காரனா வராம உழைப்பாளி வேலைக்காரனா வாங்க வரவேற்கிறோம்

@MigaMike

ரஜினிகாந்த் படிப்பறிவில்லாதவர் - சுப்ரமணியம்சாமி, BJP

மோடி Oxford University ல படிச்சாரு பாரு

@sundartsp

மோகன் ராஜாக்கு ரொம்ப தைரியம் தான், மார்கெட்டிங் பண்ணியே ஜெயிச்சாங்கன்னு காட்டுறதுக்கு வேலைக்காரன் கம்பெனி பேரு Saffronனை பேர் வச்சுருக்கார்

@devil_girlpriya

தலித் தலைவன் இங்கிலீஷ்ல பேசுறது பெருமையா இருந்துச்சாம் ...

அன்பே சிவம் ட்ரெயின் ராபரி காட்சி...முமென்ட்

@I_arasu403

ஆயிரம் கனவுகளோட நாம புது வருஷத்துக்காக காத்திருக்களாம்.

ஆனா கடவுள் ரெண்டு கோடு நோட்ல எழுதி வைச்சிருப்பாப்ல அது பிரகாரமே நடக்கும்

@senthilcp

நான் ஜெயிச்ட்டா யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய விட மாட்டேன்

அதிகார தனுஷ்பிரயோகம் நடக்குமோனு ஜனங்க பயப்படறாங்க

@Prabakar Kappikulam

முக்கியச்செய்தி

குருமூர்த்தி

தமிழிசை

பொன்.ராதாகிருஷ்ணன்

எச்.ராஜா

எடியூரப்பா

நாராயணன்

பானுகோம்ஸ்

சுமந்த் சி ராமன்

வெங்கட்ராமன்

மாலன்

இல.கணேசன்

வானதி சீனிவாசன்

உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு நேரலை தொடரும்...

@Boopathy Murugesh

புத்தாண்டில் புதிய நலன்கள் வரட்டும் - முதல்வர் எடப்பாடி வாழ்த்து

அப்படியே புது ஆட்சியும் வரனும்ன்னு வாழ்த்துங்க சார்..

-லாக் ஆஃப்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017