மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சர்க்கரை இறக்குமதி செய்யும் இந்தோனேசியா!

சர்க்கரை இறக்குமதி செய்யும் இந்தோனேசியா!

இந்தியாவிடமிருந்து கச்சா சர்க்கரை இறக்குமதி செய்வதற்கு இந்தோனேசியா முனைப்பு காட்டியுள்ளதாக இந்திய சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அண்மையில் இந்தோனேசிய சர்க்கரை சங்கத்தினர் இந்திய சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகளை டெல்லியில் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து தேசிய சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பிரகாஷ் நைக்னவரே தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், "அடுத்த ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும். இந்தியாவிடமிருந்து சர்க்கரை உற்பத்தி செய்ய இந்தோனேசியா முனைப்பு காட்டியுள்ளது. இந்தியா சமையல் எண்ணெய்யை அதிகளவில் இந்தோனேசியாவிடமிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது பண்டமாற்று முறையில் நம்மிடமிருந்து சர்க்கரையை இந்தோனேசியா இறக்குமதி செய்ய முனைப்பு காட்டுகிறது" என்றார்.

குளோபல் கரும்பு சர்க்கரை சேவைகள் (ஜி.எஸ்.சி.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராவ் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், "உலகளவில் இந்திய கச்சா சர்க்கரை சிறப்பானது. உலக விதிகள் மற்றும் காரணிகளுக்கு ஏற்ற வகையில் இந்திய கச்சா சர்க்கரை உள்ளது. கணிசமான அளவு நாங்கள் ஏற்றுமதி செய்து வருகிறோம்" என்றார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017