மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பூரி ஜெகன்னாதர் கோயிலில் செல்போனுக்கு தடை!

பூரி ஜெகன்னாதர் கோயிலில் செல்போனுக்கு தடை!

பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஜனவரி 1 முதல் செல்போன் கொண்டு வருவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.அவ்வாறு வருகை தரும் சிலர் தங்களிடம் இருக்கும் செல்போனில் கோயிலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என கோயில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து,கோயிலுக்குள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1 முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட தடையை மீறி செல்போன் கொண்டு வந்தால், செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். இதுகுறித்து போலீசாரும், கோயில் காவலர்களும் சோதனையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017