மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

நண்பனாக வரவேற்கிறேன்!

நண்பனாக வரவேற்கிறேன்!

“நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் அவரை வரவேற்கிறேன். ஆனால் அரசியலில் வெற்றி பெற சினிமாவைப் போல ரஜினி இரண்டு மடங்கு உழைக்க வேண்டும்” என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 6 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. தனது அரசியல் குறித்த நிலைப்பாட்டினை இன்று அறிவிப்பதாக நேற்று தெரிவித்திருந்ததால் ரசிகர்கள் அவரது அறிவிப்புக்காக காத்திருந்தனர். இன்று காலை ரஜினி, “காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலுக்கு வருகிறேன். ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது. தனிக்கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார்.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் விமர்சனங்களும் குவிந்துவருகின்றன. இந்தநிலையில், சென்னை பெசன்ட் நகரில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து பேசினார்.

அந்த பேட்டியில், “ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து, அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஊடகங்களில் ரஜினிக்கு வாழ்த்துகளும், வசைமொழிகளும் குவிந்துவருவதைக் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்குக் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம், அவரை நாளை வசைபாடலாம். வசைபாடுகிறவர்கள், நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துகள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவசகாசம் தேவைப்படும்” என்றார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017