மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஷாப்பிங் ஸ்பெஷல்: ட்ரெண்டில் உள்ள வளையங்கள்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: ட்ரெண்டில் உள்ள வளையங்கள்!

மணிக்கொடி

மூக்குத்தி மற்றும் காதில் அணியும் வளையங்கள் இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. சிறிய வளையங்களை மூக்குத்தியாகவும் காதில் வளையங்களாகவும் கல்லூரி மாணவிகள் விரும்பி அணிகிறார்கள்.

டீன்ஏஜ் பெண்கள் பேஷனில் புத்தம் புது மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களே அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஆடைகளில் புதுமையை விரும்பிய அவர்கள் தற்போது ஆபரணங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அதிக பணத்தை செலவிட முன்வருவதில்லை. தங்களது வழக்கமான பாக்கெட் மணியிலே பலவிதமான அணிகலன்களை வாங்கி தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

மூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. ஜீன்ஸ்- டாப்ஸ் அணிந்துகொள்ளும்போது அதற்குப் பொருத்தமாக புதுவித மூக்குத்தியும் போட்டுக்கொள்கிறார்கள். அது கம்மலை போன்று பெரிதாக இருக்கும் பிளாக் மெட்டல் மூக்குத்தி மற்றும் சிறிய கற்கள் பதித்தது எனப் பல வகைகள் கிடைக்கிறது. எல்லாவிதமான உடைகளுக்கும் அது பொருந்துவதாக உள்ளது.

சிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள். இந்தி நடிகைகள் அணிவது போன்ற பெரிய வளையமான மூக்குத்திக்கும் இளம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளன. பிளாக் மெட்டல் மூக்குத்திக்கு அடுத்த இடத்தில் குந்தன் ஸ்டைல் மூக்குத்திகள் இடம் பிடித்திருக்கின்றன. பேன்சி மூக்குத்திகளில் பல நிற கற்கள் பொருத்துவது இப்போது பேஷனாக இருக்கிறது.

மணல் போன்று வெளியே தெரியாத அளவில் மூக்குத்தி அணிந்த காலம் மாறி, இப்போது கார்ட்டூன் கதாப்பாத்திர வடிவங்களைக் கொண்ட பெரிய மூக்குத்திகள் அதிக வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. பூக்கள், பறவைகள், பிராணிகள் வடிவங்களிலான மூக்குத்திகள் மற்றும் காதணிகள் எல்லாம் இளம் பெண்களின் விருப்பமாக மாறியுள்ளன. வட்டம், சதுரம், முட்டை வடிவ மூக்குத்திகள் கல்லூரி மாணவிகளை அதிகம் கவர்கின்றன.

மூக்கைக் குத்திக்கொள்ளாத பெண்களும் மூக்குத்தி அணிகிறார்கள். அவர்களுக்கு பிரஸிங் டைப் மூக்குத்திகள் கிடைக்கின்றன. இவை ஜீன்ஸ், குர்தா, லாங்க் ஸ்கர்ட்டுகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அதே போல் கறுப்பு நிறத்திலான உடைகளை அணியும்போது பெண்கள் சில்வர், த்ரெட், நியூட்ரல் நிறங்களிலான அணிகலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும். பலவண்ணத்திலான உடைகளை அணியும்போது, அணிகலன்கள் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அழகான அணிகலன்கூட, அந்த மாதிரியான உடையோடு கலந்திடும்போது எடுபடாமல் போய்விடும். அதனால் இன்றைய இளம் தலைமுறையினர் எம்ப்ராய்டரிங், பிரிண்டட் உடைகளை உடுத்தும்போதும், ஜீன்ஸ் டாப்ஸ் பயன்படுத்தும்போதும் கழுத்து, காது ஆபரணங்கள் சிம்பிளாக இருக்கவேண்டும் என்பதற்காகவே சில்வர், ஆன்டிக் ஆபரணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017