மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஹீமோபிலியா நோய்க்கு உதவும் ஹோம் மேடு பேடுகள்!

ஹீமோபிலியா நோய்க்கு உதவும் ஹோம் மேடு பேடுகள்!

ஹீமோபிலியா(இரத்தம் உறையாமை) என்பது ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும். இது உடலில் இரத்தத்தை உறையச் செய்யாது. இந்த கோளாறு கொண்ட நபர் எந்த காயம்பட்ட பிறகும் அதிக ரத்தத்தை இழப்பார்கள். அந்த காயம் சிறிது,பெரியது என்பது விஷயமே இல்லை.

ஷீட்டல் டாக்ஹே (35), அவரது மகன் விவேக்கிற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றபோது, விவேக் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர் கண்டுபிடித்தார். மருத்துவர் விவேக்கின் இடது கையில் ஊசி போட்டபோது, அவருடைய கை வீங்கியது. இது ஹீமோபிலியா நோய்க்கான ஒரு அறிகுறியாகும். தற்போது, விவேக்கிற்கு 9 வயது. விவேக் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விவேக் இரத்தம் உறைவதற்கான ஊசியைப் போடுவதற்கு பல மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளார். அப்படி சென்றபோது, விவேக் எதிர்காலத்தில் விளைவுகளைச் சந்திக்காமல் இருப்பதற்கு மருத்துவர் ஒரு ஆலோசனையைச் சொன்னார். ஷீட்டல் கையால் தைத்து பேடுகளை(pad) உருவாக்க மருத்துவர் பரிந்துரைத்தார். இது காயத்தை தவிர்க்கும் மற்றும் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தும்.

இதுபோன்ற பேடுகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதை ஷீட்டலால் சந்தை விலைக்கு வாங்க முடியாது.வீட்டில் தயாரிக்கும் பேடுகள் விவேக்கு மட்டுமல்லாமல், மற்ற நோயாளிகளுக்கும் பயன்படுகின்றன. இந்த பேடுகளை அவர் ரூ.50-க்கு மற்ற நோயாளிகளுக்கு விற்கிறார்.சில நேரங்களில் அவர் தற்போது நோயைக் கண்டுபிடித்த நோயாளிகளுக்கு இலவசமாக அவற்றை அளிக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017