மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை!

பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை!

2016-17 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டதாகவும், வரும் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவிகிதமாகக் குறையும் எனவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

டிசம்பர் 29ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி, “தொழில் துறை உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்ட மந்தநிலையின் எதிரொலியாகவே இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார மந்தநிலை, கார்பரேட் துறையில் நிதி நெருக்கடி, தொழில்துறை உற்பத்திப் பிரிவில் கடன் வளர்ச்சி சரிவு உள்ளிட்ட காரணங்களாலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் 8 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டில் 7.1 சதவிகிதமாகக் குறையும்” என்றார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017