மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

மூன்று அடி தீவிரவாதி பலி!

மூன்று அடி தீவிரவாதி பலி!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவப்படையினர் மீதான தாக்குதல்களுக்கு மூளையாக இருந்துவந்த மூன்று அடி உயர தீவிரவாத தளபதி கடந்த வாரம் கொல்லப்பட்டார்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதியாகச் செயல்பட்டு வந்தவர் நூர் முகமது தாந்த்ரே. இவர் மூன்று அடி உயரமுள்ளவர். இவரது தலைமையிலான திட்டமிட்ட தாக்குதல்களால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவவீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

47 வயதான நூர் முகமது, காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2003ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இவருக்கு, 2011ல் பொடா சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்ரீநகர் மத்தியச் சிறைக்கு மாற்றப்படும் வரை, இவர் சில நாட்கள் திஹார் சிறையில் இருந்தார். அதன்பிறகு பரோலில் வெளியே வந்த நூர் முகமது, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கியமான தளபதியாக மாறினார்.

கடந்த வாரம், தெற்கு காஷ்மீரில் ஆவந்திபோரா மாவட்டத்திலுள்ள சம்பூரா எனுமிடத்தில் நூர் முகமது உட்பட 3 தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தேசிய நெடுஞ்சாலையில் தலைவர்கள் வரும்போது தாக்குதல் நடத்த, இவர்கள் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்ததும், அங்கு போலீசார் சென்றிருக்கின்றனர். அப்போது மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

”சம்பூராவிலுள்ள வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டபோது நிகழ்ந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது தளபதி கொல்லப்பட்டார். மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் நிகழ்ந்த குற்றங்களுக்காக, இவர் தேடப்பட்டுவந்தார். இந்த ஆண்டு ஸ்ரீநகர் விமானநிலையம் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டது நூர் முகமது தான்” என்று தெரிவித்திருக்கிறது போலீஸ் தரப்பு.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017