மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

வலுவான நிலையில் விதர்பா அணி!

வலுவான நிலையில் விதர்பா அணி!

ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 528 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (டிசம்பர் 29) இந்தூரில் தொடங்கியது. டெல்லி மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 295 ரன்களைச் சேர்த்தது. விதர்பா அணி சார்பில் ரஜினீஸ் குர்பானி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் தொடர்ச்சியாக பேட்டிங்கை தொடர்ந்த விதர்பா அணி தொடக்க முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வந்தது. அதன்படி மூன்றாம் நாளான இன்று (டிசம்பர் 31) ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 528 ரன்களைச் சேர்த்துள்ளது. அக்‌ஷய் வினோத் வத்கர் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவருடன் சித்தேஷ் நேரல் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 528 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனால் டெல்லி அணியை விட 233 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நாளை (ஜனவரி 1) நடைபெறவிருக்கும் 4ஆம் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணி அதிரடியாக விளையாடி விதர்பா அணியை விட அதிக ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் விதர்பா அணியின் பந்துவீச்சினை டெல்லி அணி சமாளிக்குமா அல்லது விதர்பா அணி தனது ஆதிக்கத்தைத் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017