மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பேறுகால உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்!

பேறுகால உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்!

பிரசவங்களில் தாய்மார்களின் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மகப்பேறு காலத்தின்போது தாய்மார்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகிய நிலையில், இதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆங்கிலப் பத்திரிகையில் அரைகுறையாக வந்த கணக்கீட்டை வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," தமிழ்நாட்டில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடிக்கும் நிலையில் அதைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு இதுதொடர்பாக நடத்திய தணிக்கையில், மகப்பேற்றின் போது தமிழ்நாட்டில் தாய்மார்கள் இறக்கும் விகிதம் நடப்பாண்டில் நவம்பர் வரை 33 விழுக்காடும், கடந்த 5 ஆண்டுகளில் 19 விழுக்காடும் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. மருத்துவத் தலைநகரம் என்று போற்றப்படும் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சென்னையில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழக்கும் விகிதம் நடப்பாண்டில் நவம்பர் வரை 21 விழுக்காடும், கடந்த 5 ஆண்டுகளில் 80 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக தேசிய சுகாதார இயக்கத்தின் தணிக்கையில் தெரியவந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி அதுகுறித்த சில புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்திலும் தொடர்ச்சியாக தாய்மார்கள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது, எந்த வகையில் விளக்கம் அளித்தாலும் ஏற்க முடியாததாகும்.அதுமட்டுமின்றி, மகப்பேற்றின் போது உயிரிழந்த தாய்மார்களில் 36 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தான் அதிக தாய்மார்கள் உயிரிழக்கின்றனர் என்ற போதிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவத்தின் போது உயிரிழக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மையாகவே கவலையளிக்கும் ஒன்றாகும். கடந்த காலங்களில் தாய்மார்களின் சத்துக்குறைவு, அதிக ரத்த அழுத்தம் ஆகியவையே உயிரிழப்புக்கு காரணமாக இருந்தன. ஆனால், இப்போது உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு துல்லியமான காரணம் என்னவென்று எங்களுக்கே தெரியவில்லை என்று மருத்துவ வல்லுனர்களே கூறியிருப்பது தான் அப்பாவி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பெருமளவில் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அண்டை நாடான இலங்கையில் ஒரு லட்சம் மகப்பேறுகளில் உயிரிழக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. இது தமிழகத்தின் அளவை விட மூன்றில் ஒரு மட்டும் தான். பொருளாதாரம், மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவ வளர்ச்சி என எந்த வகையில் பார்த்தாலும் தமிழ்நாட்டுடன் இலங்கையை ஒப்பிட முடியாது. ஆனாலும், தமிழகத்தில் தாய்மார்கள் இறக்கும் விகிதம் அதிகரித்து வருவதற்குக் காரணம் ஊழலும், அதனால் மருத்துவத் துறையில் பெருகி வரும் சீரழிவுகளும் தான்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017