மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சரிவிலிருந்து மீளும் நூற்பாலைகள்!

சரிவிலிருந்து மீளும் நூற்பாலைகள்!

இந்திய நூற்பாலைகள் வரும் காலாண்டிலிருந்து சரிவிலிருந்து மீண்டுவரும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து ஐ.சி.ஆர்.ஏ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூற்பாலைகள் கடந்த சில காலாண்டுகளாக கண்டுவந்த பெரும் சரிவிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிதியாண்டின் நான்காம் காலாண்டான ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் நூற்பாலைகளின் நிலைமை சரியாகும்.

பருத்தி விலை சரிவு, நூல்களுக்கான தேவைக்குறைவு, பருத்தி தட்டுப்பாடு, போன்ற காரணங்களால் நூற்பாலைகள் கடந்த ஒரு வருடமாக மந்தமாகவே செயல்பட்டு வருகின்றன. பூச்சித்தாக்குதல்களால் குறைந்திருந்த பருத்தி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்குப் பருத்தி விலை தோராய விலையை விட 10 முதல் 12 சதவிகிதம் குறைவாகவே இருந்தது" என்று கூறியுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017