மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ரஜினி முடிவு: திரைத் துறையினர் ரியாக்‌ஷன்!

ரஜினி முடிவு: திரைத் துறையினர் ரியாக்‌ஷன்!

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை எப்போது தெரிவிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) தான் அரசியலுக்கு வருவது குறித்துத் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி தன் அரசியல் வருகை குறித்து, “நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது. கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால் மூன்றாண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன். தனிக்கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” எனப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் குறித்தான பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளையும் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத் துறையினரைச் சார்ந்த பலரும் அவர் அரசியலுக்கு வருவது குறித்தான நிலைப்பாட்டுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்

சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள். வருக... வருக!

விஜய் சேதுபதி

தலைவர் அதிரடி! தமிழ்நாடு எதிர்காலம் - மகிழ்ச்சி.

சமுத்திரக்கனி

ரஜினி அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருப்பதை ஆமோதித்து, “வாங்க... வாங்க” என்று பதிவிட்டதுடன் ரஜினியின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

விவேக்

அதிர்ச்சி. ஆனால், ஆனந்த அதிர்ச்சி! அளித்து விட்டார் ரஜினி. இனி அவர் பின் வாங்கக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறல் கூடாது. சட்டம் ஒழுங்கு முக்கியம். வாழ்த்துகள்.

குஷ்பு

ஜனநாயகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் நம்பிக்கை கொண்டவர் ரஜினி எனத் தெரியும். அவருடைய அரசியல் முயற்சிக்கு வாழ்த்துகள்.

கஸ்தூரி சங்கர்

தலைவா... வா... வா... வா.. சீக்கிரம்.

கார்த்திக் சுப்பராஜ்

தலைவா... வா... தனித்து வா தலைவா... அரசியலுக்கு உங்களை வரவேற்கிறோம். மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.

ராகவா லாரன்ஸ்

தலைவா நன்றி! எங்கள் கனவை நினைவாக்கினாய், வரச் சொன்னோம் வந்துவிட்டாய். இனி நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும். அனைத்துத் தலைவர் ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

நல்ல முடிவு. மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. உங்களின் அரசியல் முடிவை வரவேற்கிறேன்.

’மேயாத மான்’ ரத்னகுமார்

துண்டு ஒரு வாட்டிதான் விழும். எட்றா வண்டிய... தலைவா உங்களை வரவேற்கிறோம்.

இப்படி திரைத் துறை சார்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017