மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

புத்தாண்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

புத்தாண்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

உலகம் முழுவதும் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும். இதில் இன்று நள்ளிரவு நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் 924 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

2018 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, நட்சத்திர விடுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இதில் மது விருந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது தீ விபத்து, சாலை விபத்து போன்றவை நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் ஏதும் விபத்து ஏற்பட்டால் உடனடியாகக் காப்பாற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 924 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் உள்ளன. இதில் சென்னையில் 51, மதுரையில் 15, கோவையில் 15, திருச்சியில் 10 என ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஓட்டுநர்கள் உட்பட 4,200 பணியாளர்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். மேலும் 108 அவசர அழைப்பு பிரிவில் 180 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017