மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

தினகரன் வெற்றி: எதிரொலித்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!

தினகரன் வெற்றி: எதிரொலித்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நீலகிரி மாவட்டத்தில் 29ஆவது மாவட்டமாக நேற்று (டிசம்பர் 30) நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு நடத்தப்படும் முதல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இது.

ஆனால், இதுவரைக்கு நடந்த எம்.ஜி.ஆர். விழாக்களை விட இந்த விழா மிகப்பெரிய ஒரு வித்தியாசத்தைக் கொண்டுள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.

என்ன அது என்று விசாரித்தால், “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் அனேகமாக அத்தனை மாவட்டங்களில் நடந்து முடிந்துவிட்டன. கன்னியாகுமரி, திண்டுக்கல்தான் பாக்கி. இவ்வளவு மாவட்டங்களிலும் இதுவரை நடந்த எம்.ஜி.ஆர். விழாக்களில் அந்தந்த மாவட்டம் சார்ந்த நலத்திட்ட உதவிகளையும், திட்ட அறிவிப்புகளையும் மட்டுமே வழங்கிவந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கூடவே தினகரனையும் லேசாக தாக்குவார். ஆனால் இம்முறை தினகரன் மீதான தாக்குதல் அளவு கூடியது.

இதுமட்டுமல்ல... நேற்று ஊட்டியில் நடந்த விழாவில்தான் அந்த மாவட்ட அளவைத் தாண்டி மாநில அளவிலான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இருக்கும்போது படித்த இளம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, ‘வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் தொடங்கி வைக்கப்படும். ஒரு லட்சம் பெண்களுக்கு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் முதல்வர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றுவிட்ட நிலையில் அந்தந்த மாவட்ட அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் மாநிலம் முழுமையும் கவரும்படி அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எடுக்கப்பட்ட முடிவின்படிதான் இந்த அறிவிப்பை ஊட்டி விழாவில் அறிவித்தார். இது தினகரன் வெற்றியின் தாக்கம்தான்” என்கிறார்கள் விழாவில் கலந்துகொண்ட நிர்வாகிகள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017