மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சங்கவி நடிக்கும் விழிப்புணர்வு சீரியல்!

சங்கவி நடிக்கும் விழிப்புணர்வு சீரியல்!

அஜித் நடிப்பில் உருவான அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சங்கவி 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைவாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய சங்கவி தற்போது ‘தாய் வீடு’ என்ற தொடரில் நடித்து வருகிறார். வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகி வருகிறது என அதன் இயக்குநர் ‘மங்கை’ ஹரிராஜன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் இயக்குநராக அறியப்பட்ட ஹரிராஜன் திரைப்பட தயாரிப்பாளரும் கூட. தாய் வீடு தொடர் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “இது எனது 19ஆவது தொடர். இதற்கு முந்தைய எனது தொடர்களைப்போல இதுவும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பெண்களின் உரிமைகளை பேசும் விதமாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சங்கவி குறித்தும் கதை அமைப்பு குறித்தும் பேசிய அவர், “சங்கவியுடன் ஏற்கனவே இரு படங்களில் பணியாற்றியுள்ளேன். சமூக கருத்துகளை வலியுறுத்துவதால் இந்த தொடரில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார். கிராமப்புற பின்னணியில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சுற்றி கதை நடக்கிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர்களது வீட்டில் வேலை செய்பவரை காதலித்து திருமணம் செய்கிறார். அவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். ஆனால் அந்த குடுமபத்தினர் அந்த பெண்ணின் கணவனை கொலை செய்கிறார்கள். குழந்தைகளையும், பெண்ணையும் தேடுகிறார்கள். அவர் மற்றொரு இடத்திற்கு சென்று குழந்தைகளை வளர்க்கிறார். லலிதா, அம்மா வேடத்தில் நடிக்கிறார். சங்கவியும் மீனாட்சியும் மகள்களாக நடிக்கின்றனர். சங்கவி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017