மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

13 மீனவர்கள் கைது!

13 மீனவர்கள் கைது!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000 மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு நேற்று (டிசம்பர் 30) மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் அங்கு மீன் பிடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

அப்போது மீனவர்கள் அவசர, அவசரமாகக் கரை திரும்பும் போது இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ஈடுபட்டு, மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தினர். பின்னர், சீமோன், டோனா, திவாகர், இருதயம், கிறிஸ்து உட்பட 13 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை காங்கேசன் துறைமுகம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017