மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

உலகின் அழகிய முகங்கள்!

உலகின் அழகிய முகங்கள்!

உலகின் அழகான முகங்கள் கொண்ட நூறு நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலில் இந்திய நடிகைகள் ஐந்து பேர் இடம்பிடித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த 'டிசி கேண்ட்லர் மற்றும் தி இண்டிபெண்டெண்ட் க்ரிட்டிக்ஸ்' அமைப்பு கடந்த 28 ஆண்டுகளாக மிகவும் அழகான முகங்கள் கொண்ட 100 நட்சத்திரங்கள் அடங்கிய பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருகிறது. கடந்த ஆண்டுகளில் எம்மா வாட்சன், எமிலியா கிளார்க் போன்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தனர். இந்த முறை 19 வயதான அமெரிக்க நடிகை லிசா சொபேரனோ முதலிடத்தை பிடித்துள்ளார். 85,000 பெண் நட்சத்திரங்களில் 100 முகங்களை டிசி கேண்ட்லர் உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இதில் பிரியங்கா சோப்ரா 25ஆவது இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது முறையாக பிரியங்கா இடம் பிடித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் 37ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இவர் ஐந்தாவது முறையாக இடம் பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு தீபிகா படுகோன், 12-வது இடத்தை பிடித்திருந்தார்.

நர்கிஸ் பாக்ஹ்ரிக்கு 53ஆவது இடமும் அலியா பட்டுக்கு 73ஆவது இடமும் கிடைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டம் பெற்ற ஊர்வசி ரௌட்டலா 89ஆவது இடத்தை பெற்றிருக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017