மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

வெற்றிகளுடன் ஃபெடரர்

வெற்றிகளுடன் ஃபெடரர்

ஆஸ்திரேலியாவில் நேற்று (டிசம்பர் 30) தொடங்கிய ஹோப்ஸ்மென் கோப்பை போட்டியில் ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்றார்.

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஹெர்ரி ஹோப்ஸ்மென் நினைவாக கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்படும். இந்த வருடத்திற்கான போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. 2018 ஜனவரி 6 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர், ஜப்பானின் யூகி சுகிதா இருவரும் பலபரிட்சை நடத்தினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் 6-4, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றார். அந்த போட்டி முடிந்த பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் ஃபெடரர் சுவிட்சர்லாந்து நாட்டின் வீராங்கனை பிளிண்டா பென்சிக் உடன் சேர்ந்து, ஜப்பானின் யூகி சுகிதா மற்றும் நயோமி ஒசாகா உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் செட்டினை ஜப்பான் நாட்டின் ஜோடி 4-2 எனக் கைப்பற்றியது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017