மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஏழை குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் அறக்கட்டளை!

ஏழை குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் அறக்கட்டளை!

அகமதாபாத்தில் உள்ள அறக்கட்டளை ஒன்று பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வியை அளித்து வருகிறது.

அகமதாபாத்,போபாலில் விசாமோ குழந்தைகள் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அநாதை இல்லம் கிடையாது. தங்கள் நிதி சுமை காரணமாகப் பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத குழந்தைகள் தங்கி படிப்பதற்கான ஒரு இடமாகும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வந்த குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மஞ்சுளா தேவி.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் அறக்கட்டளை பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.மேலும், ஒரு நல்ல சூழலில் தரமான கல்வியை பெற உதவுகிறது.2001ஆம் ஆண்டு அகமதாபாத் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்தித்தது. அப்போது, வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவ விசாமோ (புகலிடம்) என்ற இல்லத்தை ஆரம்பித்தேன். 2002ஆம் ஆண்டு அந்த இல்லத்தை மேம்படுத்த நினைத்து,விசாமோ குழந்தைகள் அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

இங்கு அனுமதிக்கப்படும் குழந்தைகள் கடுமையான தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டு, இதன்மூலம் உண்மையாகவே பயனடையும் குழந்தைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினார்.

இந்த அறக்கட்டளை அகமதாபாத்தில் நன்கு அறியப்பட்ட சில பள்ளிகளுடன் இணைந்து குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்கி வருகிறது.சில பள்ளிகள் கல்வியை இலவசமாகத் தருவது மட்டுமல்லாமல், போக்குவரத்து, சீருடை, புத்தகங்கள், மற்றும் கல்வி சுற்றுலா பயணங்கள் போன்ற கூடுதல் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது.

இதுமட்டுமல்லாமல், இதில் மதர் டீச்சர் என்ற தனித்துவமும் இருக்கிறது. இந்த ஆசிரியர்கள் பட்ட படிப்பு முடித்தவர்கள் அல்ல. இவர்கள், மாலைப்பொழுதில் வந்து குழந்தைகளிடம் அன்றைய தினம் நடத்தப்பட்ட பாடங்களை குறித்துக் கேட்பார்கள்.அவர்களது வீட்டுப்பாடங்களைக் கையாளவும், பள்ளியில் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத காரியங்களையும் புரிய வைப்பார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017