மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

மும்பையில் பேட்டரி பேருந்து!

மும்பையில் பேட்டரி பேருந்து!

மும்பையில் விரைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணி காக்கும் பொது போக்குவரத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது காற்று மாசுபாடு அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.

பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து வாரியம்,கோல்ட்ஸ்டோன் இன்ஃபிரேடேக் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து பேட்டரியால் இயங்கும் ஆறு பேருந்துகளை ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது. இதில், ஏற்கனவே நான்கு பேருந்துகள் மக்களின் சேவைக்கு விடப்பட்டுள்ளன.

சிவப்பு மற்றும் வெள்ளி நிற பேருந்து ஒரு முறை சார்ச் ஏற்றப்பட்டாலே, ஒரு மணி நேரத்திற்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் 200 கி.மீ. வரை பயணிக்கும்.லித்தியம்- அயன் பாஸ்பேட் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளுக்கு மூன்று மணி நேரத்துக்கு சார்ச் போட வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் 30 பேர் அமர்ந்து செல்லும் வசதி உள்ளது. பேருந்துகளிலும் இருக்கும் கியர்பாக்ஸ் அல்லது கிளட்ச் பெடல்கள் இந்த பேருந்துகளில் இல்லை. இது ஓட்டுநருக்கு வசதியாக உள்ளது.

இதில், நான்கு பேருந்துகள் சீனா BYD K-7 பேருந்து மாதிரியைக் கொண்டும், இரண்டு பேருந்துகள் இந்தியா VE Skyline Pro பேருந்து மாதிரியைக் கொண்டும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பேருந்தின் விலை ரூ.1.65 கோடி ஆகும். இது எரிபொருளால் இயங்கும் பேருந்துகளை விட விலை உயர்ந்தவை. எரிபொருளால் இயங்கும் பேருந்தை வாங்க ரூ.50 லட்சம் செலவாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேட்டரி பேருந்து இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017