மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சாராவின் ‘பார்க்கத் தோணுதே’!

சாராவின் ‘பார்க்கத் தோணுதே’!

வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் வி.கே.மாதவன் தயாரித்துள்ள திரைப்படம் பார்க்கத் தோணுதே. இந்தப் படத்தில் ஹர்ஷா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சாரா நடித்துள்ளார். பாண்டு, அப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிசம்பர் 29ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஜெய் செந்தில்குமார் படம் குறித்து பேசியுள்ளார். “காதல், காமெடி, ஆக்‌ஷன் திகில் கலந்த படமாக ‘பார்க்கத் தோணுதே’ திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் ஹர்ஷா அவரது நண்பர்களுடன் வெட்டியாகக் கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் அதே கிராமத்தில் இருக்கும் சாரா மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். இந்த நேரத்தில் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் நாயகி சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது. இதன் பின்பு என்ன ஆனது. அவள் மீதிருந்த பேய் விலகியதா..? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் கதை” என்று அவர் கூறியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017