மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பறக்கும் விளக்குகளை விற்பனை செய்ய தடை!

பறக்கும் விளக்குகளை விற்பனை செய்ய தடை!

மும்பையில் பறக்கும் விளக்குகளைப் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் மும்பை காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை ஆங்கிலப் புத்தாண்டு. அனைத்து மக்களும் இந்த புதிய வருடத்தை ஆனந்தமாக வரவேற்பார்கள். பெருநகரங்களில் வருடத்தின் கடைசி நாளான 31ஆம் தேதியின் மாலை வேளையிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும். இந்தப் புதுவருட கொண்டாட்டத்தில் எந்த அசபாவிதங்களும் நடக்கக் கூடாது என அனைவரும் விரும்புவர்.

இந்நிலையில் மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மும்பையில் பறக்கும் விளக்குகளைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் ஜனவரி 22 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், பொதுசொத்துகளை சேதம் ஏற்படுத்தும் என்பதால் பறக்கும் விளக்குகளை விற்கத் தடை விதிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017