மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

மனிதக்கழிவு அகற்றுவோர் வாழ்வும் மறுவாழ்வும்!

மனிதக்கழிவு அகற்றுவோர் வாழ்வும் மறுவாழ்வும்!

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ராமசுப்பு நினைவு அரங்கில் மனிதர் கழிவு அகற்றுவோர் வாழ்வும் மறுவாழ்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று (டிசம்பர் 30) நடைபெற்றது.

இதில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் ஜக்கையன், நடுகல் மாத இதழ் பொறுப்பாசிரியர் விடுதலை வீரன், சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர். மேலும், மாட்டு இறைச்சித் தடைக்கு எதிராக முதன்முறையாக உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத்தொடர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“கோவை ஆர்.எஸ்.புரத்தில் மலம் அள்ளும் அவலத்தால் பல பேர் இறந்துள்ளனர். குறிப்பாக 19, 21 வயதுடைய இளைஞர்களும் இதனால் இறந்தனர். இந்தச் சம்பவம் அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த 46 ஆண்டுகளுக்குப் பின்தான் அதாவது, 1993ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் நபர்களுக்காக ஆதரவானச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

அவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ளவே இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டுள்ளது. அதற்குப்பின் 2013ஆம் ஆண்டு மலம் அள்ளும் நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அதை நடைமுறைப்படுத்த நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017