மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

முதல்வரைச் சுற்றி மூன்று பேர்!

முதல்வரைச் சுற்றி மூன்று பேர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையைச் சார்ந்த மூன்று அதிகாரிகள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள். எடப்பாடி முதல்வரான பிறகும் அவர்களே நெருக்கமாக இருந்துவருவதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

“முதல்வர் ஒவ்வொரு துறையின் திட்டங்களைப் பற்றி தனது தனி செயலாளர்களிடம்தான் ஆலோசனை செய்வார். பிறகு, முதல்வரின் தனி செயலாளர்கள் அந்தந்த துறை செயலாளர்களிடம் முதல்வரின் உத்தரவுகளையும் நடவடிக்கைகளையும் கொண்டு சேர்ப்பார்கள். முதல்வராக கருணாநிதி இருந்தபோதும் ஜெயலலிதா இருந்தபோதும் கோட்டை நடைமுறை என்பது இப்படித்தான். முதல்வரின் தனி செயலாளர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு.

ஆனால், இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லாமல் தன்னை ஒரு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவே அதிகாரிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் தனி செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகள் கேட்பதோ, சொல்வதோ இல்லை.

இன்னமும் முதல்வரைச் சுற்றி, முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளான மணி, சுவாமிநாதன், கிரி மூவர்தான் நெருக்கமாக இருந்துவருகிறார்கள்.

இந்த மூவரிடம் விவாதிக்கும் அளவுக்குக்கூட, முதல்வரின் தனி செயலாளர்களிடம் விவாதிப்பதில்லை. இத்தனைக்கும் இந்தத் தனி செயலாளர்கள் அம்மா இருக்கும்போது நியமிக்கப்பட்டவர்கள்” என்று வருத்தப்படுகிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017