மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

தூதரைத் திரும்ப பெற்ற பாலஸ்தீனம்!

தூதரைத் திரும்ப பெற்ற பாலஸ்தீனம்!

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் பேரணியில் கலந்துகொண்ட தூதரைப் பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுள்ளது.

மும்பையில் 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., அமெரிக்கா போன்றவை பயங்கரவாதியாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்த இவரை விடுதலை செய்யும்படி லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ராவல்பிண்டியில் அவர் நேற்று முன்தினம் நடத்திய பேரணியில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலி கலந்துகொண்டார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் நடத்திய பேரணியில் பாலஸ்தீன தூதர் பங்கேற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும். புதுடெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரிடம் முறைப்படி இந்தியாவின் சார்பில் கண்டனத்தைப் பதிவு செய்வோம். மேலும் பாலஸ்தீன நாட்டின் வெளியுறவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் பேசுவோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான தங்களின் தூதரை பாலஸ்தீனம் நேற்று (டிசம்பர் 30) திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அட்னான் அபு அல் ஹைஜா கூறுகையில், “அவர் செய்தது எங்கள் அரசுக்கு ஏற்புடையது அல்ல. இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்புக் கொண்டுள்ள பாலஸ்தீனம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்குத் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017