மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

மும்பை தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்!

மும்பை தீ விபத்து: ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்!

மும்பை கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து மும்பை மாநகராட்சியினர், சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள உணவு விடுதிகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மும்பை கமலா மில்லில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள உணவு விடுதிகளை உடனடியாக அகற்ற, மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மும்பை மாநகராட்சி, குழுக்கள் அமைத்து சரியான ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் சோதனை நடத்தத் தொடங்கினர்.

இந்த நிலையில் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால், கமலா மில்லில் உள்ள இரண்டு உணவு விடுதிகள் (ஸ்கைவியூவ் கபே, சோசியல்) மற்றும் ராகுவன்ஷி மில்லில் உள்ள மூன்று உணவு விடுதிகள் (பிரணாய், ஃபியூம்ஸ், ஷீசா ஸ்கை லாங்) அகற்றப்பட்டது. மேலும் அந்தேரி பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள உணவு விடுதிகளும் விரைவில் அகற்றப்படும் என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017