மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பண மோசடி: 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை!

பண மோசடி: 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை!

தாய்லாந்தில் நிதி நிறுவனங்களைத் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கைச் சேர்ந்தவர் புதிட் கிட்டிகிராடிலோக் (வயது 34). இவர் நிதி நிறுவனங்கள் நடத்திவந்தார். அந்த நிறுவனத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் விளம்பரம் செய்தார்.

அதை நம்பி பொதுமக்கள் ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திரும்ப வழங்கவில்லை. அதன்மூலம் 40 ஆயிரம் பேரிடம் ரூ.1,200 கோடி பணம் மோசடி செய்தார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புதிட் கிட்டிகிராடிலோக் மீது 2,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017