மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

உதவி இயக்குநராக ஆசை!

உதவி இயக்குநராக ஆசை!

கதாநாயகியாக வலம்வரும் ‘கயல்’ஆனந்தி, தனக்கு உதவி இயக்குநராக ஆசை என்று கூறியுள்ளார்.

ஏ3வி சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் கயல் ஆனந்தி பேசும்போது, “இந்தப் படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கிறேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். எனக்கு உதவி இயக்குநராக ஆசை. அதனால் பூபதி பாண்டியன் சாரிடம், நான் உங்ககிட்ட கொஞ்ச நாள் உதவி இயக்குநராக வேலை பார்க்கிறேன் என வாய்ப்பு கேட்டேன். அந்த அளவுக்கு அவரின் காமெடி டைமிங் சென்ஸ் பார்த்துப் பிரமித்துப் போனேன்” எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பூபதி பாண்டியன், “எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது. அதன்பின்தான் விமல் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் டைரக்ஷனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்த வகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்” என்று கூறினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017