மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

முத்தலாக்: எதிர்க்கும் முலாயம், ஆதரிக்கும் மருமகள்!

முத்தலாக்: எதிர்க்கும் முலாயம், ஆதரிக்கும் மருமகள்!

முத்தலாக் சட்ட மசோதாவுக்கு சமாஜ்வாதி கட்சி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், முலாயமின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் அதை வரவேற்றுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் உரிமையைப் பறித்து அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் முத்தலாக் முறையைத் தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இதற்கு இஸ்லாமிய மதத்தின் உரிமைகளுக்குள் மத்திய அரசு தலையிடுவதாக காங்கிரஸ், திமுக, அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சியிலிருந்து முலாயம் சிங் யாதவ் தனது எதிர்ப்பை அவையிலேயே பதிவு செய்தார்.

இந்த நிலையில் முலாயமின் இளைய மகன் ப்ரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளது. நீண்ட நாள்களாக இஸ்லாமிய பெண்களுக்கு இருந்துவந்த குறை இதன் மூலமாக நீங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அபர்ணா யாதவ் இதற்கு முன்பே சமாஜ்வாதி கட்சி எடுத்த பல்வேறு நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார் .

மேலும், பாஜக ஆட்சியமைத்த சில வாரங்களிலேயே முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனது கணவர் ப்ரதீக் யாதவுடன் சந்தித்தார். அபர்ணா யாதவ் பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த ஒரு செல்ஃபியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், இதற்கு சமாஜ்வாதி கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017