மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஹெல்த் ஹேமா: ஆரோக்கிய வாழ்வுக்குப் பயன்தரும் கீரை வகைகள்!

ஹெல்த் ஹேமா: ஆரோக்கிய வாழ்வுக்குப் பயன்தரும் கீரை வகைகள்!

எந்தக் கீரையை எப்போது சாப்பிடலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?

தற்போது பனிக்காலம்.

மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் (புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை) சாப்பிட ஏற்ற கீரைகள்

கற்பூரவல்லி

அரைக்கீரை

முசுமுசுக்கை

தூதுவளை

மூக்கிரட்டை

புதினா

சுக்கான்கீரை

கோடை காலத்தில் (பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை) சாப்பிடும் கீரைகள்

வல்லாரைக்கீரை

பசலைக்கீரை

வெந்தயக்கீரை

சக்ரவர்த்திக் கீரை

பசலைக்கீரை

கரிசலாங்கண்ணிக்கீரை

மணத்தக்காளிக்கீரை

தண்டுக்கீரை

அகத்திக்கீரை (மாதம் இருமுறை மட்டுமே)

வருடம்_முழுதும் சாப்பிட தகுந்த கீரைகள்

வல்லாரைக்கீரை

முருங்கைக்கீரை

புளிச்சக்கீரை

அரைக்கீரை

பொன்னாங்கண்ணிக்கீரை

கண்களின் பார்வை தெளிவுடன் இருக்க உதவும் கீரைகள்

முருங்கைக்கீரை

கறிவேப்பிலை

பொன்னாங்கண்ணி

கொத்தமல்லி

மூட்டுவலி போக்கும் கீரைகள்

முடக்கறுத்தான் கீரை

கறிவேப்பிலை

கீரை உண்பதை தவிர்க்க வேண்டியவர்கள்

சிறுநீரகக் கற்கள், பித்தப்பையில் கற்கள், கருப்பைக்கட்டி, உள்ளவர்கள் பொதுவாக கீரை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயாளிகள் அதிக குளிர்ச்சியைத் தரக்கூடிய வெந்தயக்கீரை, மணத்தக்காளி, முளைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவே கூடாது. அதற்குப்பதிலாக, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நரம்புத்தளர்ச்சி மற்றும் தாம்பத்ய குறைபாடுகள் கொண்டவர்கள் முருங்கைக்கீரை, தூதுவளை கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய கீரைகளைப் பருப்பு, மிளகு, சீரகம், நெய் போன்றவை சேர்த்து உண்டுவர நிவாரணம் கிடைக்கும்.

சத்தான கீரைகள் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.

அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017