மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ரோந்து பணியில் ரோபோ!

ரோந்து பணியில் ரோபோ!

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் காவல் துறையில் டிசம்பர் 28ஆம் தேதி ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் ரோபோ போலீஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

நகரின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஆதரவளிக்க இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகிய சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனால், அவற்றைக் கண்காணித்து புகார்களைப் பதிவு செய்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது.

5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ரோபோவில் கேமரா மற்றும் உணர்வு கருவியுடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ ஹைதராபாத்தில் உள்ள ‘எச்.பாட்ஸ்’ ரோபோடிக் என்ற நிறுவனம், தாய்லாந்தின் ‘அமிகோ’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

எல்லா இடங்களுக்கும் நகர்ந்து செல்லும் ரோபோ மக்களிடமிருந்து புகார்களைப் பெற்று பதிவு செய்யும். அவர்களிடம் விசாரணை நடத்தி, கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். அவசர புகார்களை ரோபோ போலீஸ் மூலம் வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோவின் செயல்பாடுகளை 16 பேர் கொண்ட குழுவினரால் ஆறு மாதங்கள் கண்காணிக்கப்பட்டன. இது ரோந்து பணிக்கு மட்டுமல்லாமல், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் இது உதவும்.

இதுகுறித்து ‘எச்-பாட்ஸ்’ நிறுவன உரிமையாளரும், இதற்கு மூளையாகச் செயல்பட்ட ஆர்யா மற்றும் பி.எஸ்.வி. கிஷான் ஆகியோர் கூறுகையில், “இந்த ரோபோ மனிதர்களுக்குப் பதிலாக உருவாக்கப்படவில்லை. கூடுதல் பணிக்காக உருவாக்கப்பட்டது. போலீஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான இடங்களிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும். இத்தகைய ரோபோவை தயாரிக்க ஒன்பது ஆண்டுகள் ஆனது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017